லண்டனில் 2 ஆண்களுக்கு கத்திக்குத்து: புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை
தெற்கு லண்டனில் உள்ள இரவு கிளப்பிற்கு வெளியே ஓரினச்சேர்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ஆண்கள் கத்திக்குத்து சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துமீறிய தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை இரவு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிளாபம் ஹை சாலையில் உள்ள இரவு கிளப்பிற்கு வெளியே 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட நபர் கத்தியால் இருவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்ட நிலையில், மெட் பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
MET POLICE HANDOUT
அத்துடன் இதனை ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருத்தில் எடுத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சரியாக இரவு 22:25 மணி அளவில் இரண்டு ஆண்கள் இரவு கிளப்புக்கு வெளியே நின்று கொண்டு இருந்த போது அரங்கேறியுள்ளது.
வலைவீசும் பொலிஸார்
இந்நிலையில் தாக்குதல் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல் தலைமை கண்காணிப்பாளர் ஜீவன் சைப் கேட்டுக் கொண்டுள்ளார்.
GOOGLE
ஏனென்றால் இவரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |