ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக்: எலக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய புரட்சி!
ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு சவால் வைக்கும் வகையில், ஹோண்டா ஆக்டிவாவின் மின்சார பதிப்பு விரைவில் சாலைகளில் தனது பயணத்தை தொடங்க உள்ளது.
இந்த புதிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்(Honda Activa Electric), சிறப்பான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன், இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான ஆக்டிவா மாடலை மின்சார வாகனமாக அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்ப்பு
ஹோண்டா(Honda) நிறுவனம் தனது முதல் மின்சார ஆக்டிவா ஸ்கூட்டரில், இ:ஸ்வாப் எனப்படும் பற்றரி ஸ்வாப்பிங்(மாற்று) தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது சார்ஜ் செய்யும் நேரத்தை குறைத்து, உங்கள் பயணத்தை இடைநிறுத்தாமல் தொடர அனுமதிக்கும்.
அத்துடன் இதில், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, ஸ்மார்ட்போன் இணைப்பு, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற டிஸ்க் பிரேக் போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கலாம்.
முக்கிய எதிர்பார்ப்பாக இந்த ஸ்கூட்டரின் பற்றரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 200 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பு மற்றும் வெளியீட்டு திகதி
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக்(Honda Activa Electric) புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து தனது ஆக்டிவாவின் பாரம்பரிய வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு(2025) மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |