Suitcase போல் இருக்கும் Electric Scooter: இதன் அம்சங்கள் மற்றும் விலை என்ன?
Honda நிறுவனம் புதிய Electric Scooter ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Electric Scooterஆ இல்லை நகர்த்தி செல்லும் Suitcaseஆ என அனைவரும் குழம்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இதற்கு Honda Motocompacto என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் விலை
இதன் விலை வெளிநாடுகளில் $995 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்திய மதிப்பில் இந்த Scooterக்கு சுமார் ரூ. 83,000 விலை இருக்கும். ஆன்லைன் தளங்கள் வாயிலாக Scooterஐ முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என Honda கூறியுள்ளது.
இந்தியாவில் இதுவரை இந்த Scooter அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், விரைவில் இதுபோன்ற Compact scooterகளை நிறுவனம் இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அம்சங்கள்
இந்த Trolley electric scooterன் முன்சக்கரத்தில் Direct drive electric motor பொருத்தப்பட்டுள்ளது. இது 490 Watt அளவுக்கு அதிகப்படியான பவரையும், 16Nm dark வெளிப்படுத்துகிறது.
Motocompactoல் மணிக்கு 24 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லலாம் என்று Honda தெரிவித்துள்ளது.
மேலும் Battery யின் முழு திறன் 6.8Ah ஆகவும், இதனை 110V Charger கொண்டு முழுவதுமாக திறனூட்ட 3.5 மணிநேரங்கள் ஆகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை Charge செய்தால் 19km வரை இந்த Scooter இயக்கலாம்.
Motocompacto என்பது சுருக்கமாகவும், பயணிக்க எளிதாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இதை எளிதாக கையில் மடித்து எடுத்துச் செல்லலாம்.
Honda Motocompactoன் Wheelbase 741 மிமீ ஆகவும், இருக்கையின் உயரம் வெறும் 622 மி.மீ. ஆகவும் உள்ளன. ஸ்கூட்டரின் எடை வெறும் 19 kg ஆகும்.
இது மிகவும் இலகுவானது மட்டும் அல்லாமல், மிகவும் சிறியதாகும் தோற்றம் அளிக்கிறது.
மின்சார ஸ்கூட்டரின் நீளம் 967 மிமீ ஆகவும், முறையே உயரம் 889 மிமீ ஆகவும், அகலம் 436 மிமீ அளவுகள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்கூட்டரை மடிக்கும்போது முறையே 741 நீளம், 535 மிமீ உயரம் 93.98 மிமீ அகலம் வரை குறைந்து காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |