மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள்
Honda நிறுவனம் தனது முதல் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
ஹோண்டா ஆக்டிவா இ (Activa e) மற்றும் ஹோண்டா QC1 என்ற பெயரில் இரண்டு ஸ்கூட்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Honda Activa e
ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றக்கூடிய பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காலியான பேட்டரியைக் கழற்றி வைத்துவிட்டு, சார்ஜிங் ஸ்டேஷன்களில் மற்றொரு பேட்டரியை மாற்றிக்கொண்டு செல்லலாம்.
இது, இரண்டு மாற்றக்கூடிய 1.5 kWh பேட்டரிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 102 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் மேலும் இது, Standard, Sport, மற்றும் Econ ஆகிய மூன்று ரைடிங் மோடுகளுடன் வருகிறது.
ஹோண்டா QC1
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 kWh fixed பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு சார்ஜில் 80 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் கிடைக்கும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், 5-இன்ச் LCD instrument panel, இருக்கைக்கு கீழ் சேமிப்பு மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அப்போது, ஸ்கூட்டரின் விலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |