ரூ.7.99 லட்சத்தில் புதிய Honda Amaze இந்தியாவில் அறிமுகம்
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான செடான் Honda Amaze காரின் facelift மொடலை இன்று (டிசம்பர் 4) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வெளிப்புற வடிவமைப்பு, புதிய உட்புறம் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் மூன்றாம் தலைமுறை அமேஸை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் CVT டிரான்ஸ்மிஷனுடன் லிட்டருக்கு 19.46 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
மேம்படுத்தப்பட்ட இந்த சப்-காம்பாக்ட் செடான் 3 வேரியண்ட்டுகள் மற்றும் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த காரின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டாப் வேரியண்ட் ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை முதல் 45 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் அறிமுக விலைகள் ஆகும். இதற்குப் பிறகு, விலை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய Honda Amaze நாட்டிலேயே மிகவும் மலிவான மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) அம்சம் கொண்ட கார் என்று நிறுவனம் கூறுகிறது.
2024 ஹோண்டா அமேஸ் Maruti Dzire, Hyundai Aura, Tata Tigor மற்றும் பிற சப்-4 எம் செடான்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய அமேஸின் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கியுள்ளன மற்றும் விநியோகங்கள் ஜனவரி 2025-இல் தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |