170 கி.மீ ரேஞ்ச்.., விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடும் ஹோண்டா நிறுவனம்
விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய எலெக்ட்ரிக் பைக்
500 சிசி பைக் போல செயல்படும் புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கானது வரும் செப் 2ம் திகதி வெளியிடப்படுகிறது.
இது குறித்த டீசர் வீடியோவை ஹோண்டா நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
அதில், ஃபன் கான்செப்டில் உருவாக்கப்படும் இந்த பைக் Mid-size petrol engine பைக்கிற்கு இணையான Performance -யை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 50 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எனவும், டார்க் திறனும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதில், 4.1kWh மற்றும் 6.3kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 4.1kWh Battery pack variant 120 கி.மீ ரேஞ்சையும், 6.3 kWh Battery pack variant 170 கி.மீ ரேஞ்சையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |