ஐரோப்பாவில் Honda WN7 மின்சார மோட்டார்சைக்கிள் அறிமுகம்
Honda நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளான Honda WN7-ஐ ஐரோப்பாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
2040-க்குள் தனது அனைத்து மோட்டார்சைக்கிளையும் கார்பன்-நியூட்ரல் ஆக்கும் நோக்கத்துடன், இந்த மொடல் ஹோண்டாவின் சுற்றுச்சூழல் திட்டத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
Honda WN7 மொடல் மிலானில் நடந்த EICMA 2024 கண்காட்சியில் EV Fun Concept என அறிமுகமான வடிவத்தின் உற்பத்தி பதிப்பாகும்.
W என்பது BeTheWind என்ற வளர்ச்சி கருத்தையும், N என்பது Naked வகையையும் மற்றும் 7 என்பது அதன் ஆற்றல் வகையையும் குறிக்கிறது.
இது ஹோண்டாவின் 75 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
Estimated range 130Km
Fixed lithium-ion battery
CCS2 சார்ஜிங் தொழில்நுட்பம்மூலம் 30 நிமிடங்களில் 20-80% வரவு வேகமாக சார்ஜ் செய்யலாம்
Home charging - 3 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்
600CC ICE பைக்குகளுக்கு சமமான ஆற்றல், 1000CC-க்கு சமமான டார்க்
5-inch TFT Display, Honda RoadSync இணைப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |