Honda WN7: இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் அறிமுகம்
ஹோண்டா நிறுவனம் தனது முதல் முழு அளவிலான மின்னணு மோட்டார் சைக்கிளான Honda WN7-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட Ultraviolette F77-க்கு நேரடி போட்டியாகக் கருதப்படுகிறது.
நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நகர்ப்புற ஸ்டைலுடன் கூடிய இந்த பைக், A1 மற்றும் A2 உரிமம் கொண்ட பயனர்களுக்கேற்ப இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.
9.3kWh உயர் மின்னழுத்த பேட்டரி, liquid-cooled motor, 50kW peak power, 100Nm torque ஆகியவை WN7-ன் முக்கிய அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பைக்கில் 140km வரை பயணிக்கக்கூடிய திறன் உள்ளது.
20 முதல் 80 சதவீதம் வரை வேகமாக 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதி, வீட்டில் சார்ஜிங் நேரம் 2.4 முதல் 5.5 மணி நேரம் வரை ஆகும்.
மென்மையான சவாரிக்காக Showa 43mm USD forks, Pro-Arm mono-shock swingarm ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் வசதிக்காக 4 ரைடிங் மோடுகள், 4 deceleration power settings, Walking Speed Mode, Selectable Speed Limit Assist, Cornering ABS, Honda Selectable Torque Control ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த எலக்ட்ரிக் பைக் Smart Key, RoadSync app மூலம் 5-inch TFT display இணைப்பு, USB-C socket, LED dual projector headlights, DRL, Emergency Stop Signal போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.
3 வண்ணங்களில் கிடைக்கும் WN7, இந்திய மின்சார வாகன சந்தையில் ஹோண்டாவின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda WN7 electric motorcycle, Honda EV bike India launch 2025, Ultraviolette F77 rival bike, Honda WN7 specs and features, electric bike with 140km range, Honda RoadSync EV bike, Honda WN7 price and variants, A1 license electric bike India, Honda EV motorcycle charging time, Honda WN7 vs F77 comparison