சர்க்கரைக்கு பதில் தேன் பயன்படுத்துங்க! உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன?
தேன் ஒரு ஆரோக்கியமான உணவு, தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்கள் உள்ளன.
மேலும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ் மற்றும் டார்டாரிக் ஆஸிட், லாக்டிக் , சிட்ரிக், க்ளாரிக் அமிலம் போன்றசத்துப்பொருள்களும் உள்ளன.
இது இருமல் கொலஸ்ட்ரால் போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மையுடையது.
சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது உடலுக்கு மிகுந்த நன்மையளிக்கிறது.
வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரை கரும்பு சாறை சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சுக்ரோஸ், லாக்டோஸ் மற்றும் பிரக்டோஸ் மட்டுமே உள்ளது. இது உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது ஆரோக்கியமானது. இருப்பினும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் மிக குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இது கல்லீரலைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. இது இயற்கையான முறையில் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
தேனை உட்கொள்வது நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பல நோய் தொற்றுகளை நீக்குகிறது.
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பு வருகிறது. பல ஆய்வுகள் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை தேனினால் குறைக்க முடியும் என்று கூறுகின்றன.
தேனை நக்கினால் இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு இது ஒரு மருந்தாகும், ஏனெனில் தேன் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
தேன் அசிடிட்டி மற்றும் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. மேலும் வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பயன்படுகிறது. இதைப் பூசினால் ஈறுகளின் வீக்கம் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |