ஹனி ட்ராப் வலையில் சிக்கிய DRDO விஞ்ஞானி கைது: வீடியோ காலில் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை பரிமாறிய குற்றச்சாட்டு
பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை, வீடியோ கால் மூலம் பரிமாறிய குற்றத்திற்காக டிஆர்டிஓ விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹனி ட்ராப் வலை
இந்திய மாநிலம் மகாராஷ்ட்ராவை சேர்ந்த, DRDO என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய அங்கமான டிஆர்டிஎல் என்ற அமைப்பில், தலைமை விஞ்ஞானியாக பிரதீப் குரூல்கர் என்பவர் பணியாற்றியுள்ளார்.
@drdo
ராணுவ ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி குழுவில், புனேவில் பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஹனி ட்ராப் எனப்படும் பாலியல் வலையில் சிக்கிய பிரதீப், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய ராணுவத்தின் தகவல்களை பரிமாறியது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பிரதீப் கைது
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த இந்திய பயங்கரவாத தடுப்பு படையினர் விஞ்ஞானி பிரதீப்பை கைது செய்துள்ளனர்.
@pipanews
விசாரணையில் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை காட்டி, இவரை தன்பக்கம் இழுத்த பாகிஸ்தான் ரகசிய குழுவினர் பின்னர் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பல ரகசிய தகவல்களை இவரிடமிருந்து பெற்றுள்ளனர்.
மேலும் இந்த குற்றம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அவர் மீது மும்பையிலுள்ள காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள ஐஐடி கல்லூரியில் படித்த பிரதீப் குரூல்கர்(60) கடந்த 1988ஆம் ஆண்டில், டிஆர்டிஓவில் ஆராய்ச்சி துறையில் பணியாற்ற துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.