சீன தூதருக்கு பிரித்தானியா கண்டனம்: பின்னணி காரணம் என்ன?
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சீன தூதரை பிரித்தானியா கண்டித்துள்ளது.
சீன தூதருக்கு கண்டனம்
ஹாங்காங்கிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட பின்னர், சீனா மீது பிரித்தானியா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, லண்டனில் உள்ள சீன தூதரை வரவழைத்து பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) செவ்வாய்க்கிழமை, மே 14, 2024 திகதி அன்று ஜெங் ஜேகுவாங்கை அழைத்தாக தெரியவந்துள்ளது.
அத்துடன் கூட்டத்தின் போது, பிரித்தானிய அதிகாரிகள், பிரித்தானிய மண்ணில் உளவு வேலை மற்றும் சைபர் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மீண்டும் வலியுறுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட உளவு வேலை வழக்கின் சரியான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
லண்டனில் உள்ள சீன தூதரகம் பிரித்தானியாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |