96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்
HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி நிர்ணயித்த 96 ஓட்டங்கள் இலக்கினை, ஹொங்கொங் சீனா 20வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.
ஜப்பான் 95 ஓட்டங்கள்
ஹொங்கொங் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கான்டோவில் நடந்தது.
முதலில் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
எஹ்சான் கான் 3 விக்கெட்டுகளும், யாசிம் முர்தஸா 2 விக்கெட்டுகளும், அனஸ் கான் மற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷாஹித் வாசிப் மற்றும் ஹசன் கான் இருவரும் வெற்றிக்காக போராடினர்.
ஹசன் கான் 25 ஓட்டங்களில் வெளியேற, ஹொங்கொங் சீனா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மிரட்டலாக பந்துவீசிய பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 3 விக்கெட்டுகளும், சார்லி ஹரா 2 விக்கெட்டுகளும், மகோடோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.