இந்தியாவில் அறிமுகமாகும் Honor 5G போன்! என்னென்ன சிறப்பம்சங்கள்
ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் குறிப்பாக, பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய போனின் டீசரை அண்மையில் மாதவ் சேத் வெளியிட்டார். இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஹானர் எக்ஸ்9ஏ 5G ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போன், அசத்தலான வடிவமைப்புடன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன
இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போனானது வட்ட வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கும் புகைப்படம் அட்டகாசமாக இருக்கும். இதில் செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புக்கு 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.
மேலும், இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளது. அதுமட்டுமல்லாம், இந்த செல்பி கேமரா மூலம் 1080p வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
இதில், பின்பக்கத்தில் உள்ள கேமரா நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், எச்டிஆர், டைம் லேப்ஸ், சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. எல்இடி பிளாஸ் உடன் இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் இந்த ஹானர் எக்ஸ்9ஏ ஸ்மார்ட் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Snapdragon 695 chipset) உடன் அட்ரினோ 619 ஜிபியுடன் இருப்பதால் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
இந்த போனின் டிஸ்பிளே 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி வளைவில் இருக்கும். அதனால், மிக சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.
An optimum tech is coming your way to redefine your experience. A few days to go for the biggest announcement. Any guesses?#TechForIndians https://t.co/f8Re8C9UJR
— Madhav Sheth (@MadhavSheth1) August 11, 2023
சிறப்பு அம்சம்
120hz Refresh Rate
800 nits Brightness
300 Hz Touch Sampling Rate
5100 mah Battery
40 watt Fast Charging
மேலும், இதில் நீண்ட நேரம் ஜார்ஜ் இருப்பதால் பயனர்களுக்கு ஜார்ஜ் பற்றிய கவலை தேவையில்லை.
அதுமட்டுமல்லாமல், Wi-Fi, USB Type-c Port, Bluetooth 5.1 ஆகியவை அடங்கியுள்ளன.
குறிப்பாக பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |