ரூ.18 ஆயிரத்தில் 108MP கேமரா., அசத்தலான அம்சங்களுடன் Honor X50i+
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதைவிட முக்கியமாக பட்ஜெட் சந்தையை குறிவைத்து மலிவான போன்களை கொண்டு வருகிறார்கள். மிக முக்கியமாக, சீன ஸ்மார்ட் போன் ஜாம்பவான்கள் சந்தையில் புதிய போன்களை அறிமுகப்படுத்துகின்றனர்.
இந்த வரிசையில் சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஹானர் புதிய போன் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த போன் குறைந்த பட்ஜெட்டில் எதிர்பாராத அம்சங்களை வழங்குகிறது.
Honor X50A+ சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட Honor X50i ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக இந்த போன் கொண்டுவரப்பட்டது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Artificial Intelligence எதிர்காலத்தில் மனித குலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துமா? சமீபத்தில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவங்கள்
அம்சங்களைப் பொறுத்த வரை, Honor X50i+ போனில் MediaTek Dimension 6080 SoC சிப்செட் செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு வகைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
Honor X50i+ ஆனது 12GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகைக்கு CNY 1599 விலையில் இருக்கும். இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18,600 ஆக இருக்கும். மேலும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை CNY 1799 சீன யுவானாக இருக்கும். இந்திய மதிப்பில் ரூ. 20,900 ஆக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் வாட்டர் ப்ளூ, பேண்டஸி நைட் பிளாக், இங்க் ஜேட் கிரீன் மற்றும் லிக்விட் பிங்க் வண்ணங்களில் கிடைக்கிறது.
கேமராவை பொறுத்த வரை இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. போனின் பின்புறம் வட்ட வடிவ LED ஃபிளாஷ் உள்ளது.
திரையைப் பொறுத்தவரை, இது 6.7 இன்ச் AMO LED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்தத் திரை 2412×1080 பிக்சல்களைக் கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் Refresh Rate, 2000 நிட்ஸ் உச்ச பிரகாசம் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 13 OS-ல் செயல்படும் இந்த போனில் Magic OS 7.2 வெர்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, இது 4500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 35 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Honor X50i+ ஆனது 5G, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth V5.1, OTG, GPS, AGPS, Klonas, USB Type-C போர்ட் இணைப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Honor X50i+, 108-Megapixel Camera, 35W Fast Charging, Honor X50i Plus Price, Honor X50i Plus Specifications