ஹார்முஸ் விவகாரத்தில் முயற்சிகள் தொடரும்... மீண்டும் உறுதிப்படுத்திய மேக்ரான்
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் தாம் கவனம் செலுத்தி வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எங்கள் இலக்கு
ஏதென்ஸில் கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேக்ரான், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பீதியானது, தானாகவே பற்றாக்குறைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

சர்வதேச சட்டத்திற்கு இணங்க, வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமின்றி கப்பல் போக்குவரத்து மீள உத்தரவாதம் அளித்து, முழுமையாக மீண்டும் திறப்பதே எங்கள் இலக்காகும் என குறிப்பிட்டுள்ள மேக்ரான், அதன்பிறகு, நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என்றார்.
இந்த நிலையில், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளுக்கான முக்கிய போக்குவரத்துப் பாதையாகவும் விளங்கும் இந்த நீரிணை வழியாக நடைபெறும் போக்குவரத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் காரணமாகத் தடைபட்டுள்ளது.
ஈரான் சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாலும், அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீது முற்றுகையை மேற்கொண்டுள்ளதாலும் பதற்ற நிலை நீடிக்கிறது.
இது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடித்தால், நாம் எரிசக்தி பற்றாக்குறை நிறைந்த ஒரு உலகிற்குள் நுழைவோம்; ஆசிய நாடுகள் ஏற்கனவே இத்தகைய நிலையை எதிர்கொண்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார் TotalEnergies நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பேட்ரிக் பௌயான்.
தயாராக இருப்பதாக
மேலும், பூமியின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் 20 சதவீதத்தை, பயன்படுத்த முடியாத நிலையிலும் அணுக முடியாத நிலையிலும் வைத்திருப்பது, பெரும் விளைவுகள் ஏதுமின்றி சாத்தியமாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேசப் பணியில் இணையத் தாங்கள் தயாராக இருப்பதாகப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆனால், போரைத் தொடங்கிய இஸ்ரேலும் அமெரிக்காவும் நிபந்தனைகளை முன்வைக்க முடியாது எனவும், பாதிக்கப்பட்ட நாடு ஈரான் என்றும் அதன் முதன்மையான தலைவர் கூறுகின்றனர்.
இதனால், பேச்சுவார்த்தை என்பது தங்களின் நிபந்தனைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், தங்களைக் கட்டாயப்படுத்த முடியாது எனவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |