பட்டப்பகலில் கிழக்கு லண்டன் பள்ளியில் கோர சம்பவம்... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்
கிழக்கு லண்டனின் Hornchurch பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 18 வயது மாணவன் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர்
ஆறாவது படிவக் கல்லூரியில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில் உள்ள டெஸ்கோ எக்ஸ்பிரஸ் வெளியே அந்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நியூ சிட்டி கல்லூரி மொத்தமாக மூடப்பட்டதுடன், மாணவர்கள் எவரும் உரிய அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.
@mylondon
பகல் 10.41 மனியளவில் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அந்த நபர் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக பள்ளியின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார், இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்றே தெரியவந்துள்ளது. மாயமான அந்த தாக்குதல்தாரியை பொலிசார் தேடிவருவதாக கூறப்படுகிறது.
நான்கு நாட்களில் இரண்டாவது சம்பவம்
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்து மாணவர்கள் அனைவரும் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனிடையே, நான்கு நாட்களில் Hornchurch பகுதியில் நடக்கும் இரண்டாவது கத்திக்குத்து சம்பவம் இதுவென கூறுகின்றனர்.
@mylondon
பிப்ரவரி 18ம் திகதி கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்ட 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களுக்கு பின்னர், குறித்த இளைஞர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, முகத்தில் காயங்கலுடன் இன்னொரு 19 வயது நபரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.