2022 ஆனி மாத ராசிப்பலன்கள் : இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகுதாம்

Horoscope
By Kishanthini Jun 15, 2022 05:22 AM GMT
Report

  தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும்.

மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுன மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது.அந்தகையில் இந்த மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகுது என்று பார்ப்போம்..

கிரக நிலை

  • ஆனி மாதத்தில் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
  • 32 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
  • ரிஷப ராசியில் இருக்கும் புதன்,18 ஆம் தேதி மிதுன ராசிக்கு சென்று 32 ஆம் தேதி கடக ராசியில் அமர்கிறார்
  • . மேஷ ராசியில் நிற்கும் சுக்கிரன் 4ம் தேதி ரிஷப ராசிக்கு மாறி 29 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார்.

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் அற்புதமான பலன்களைக் காணப்போகிறீர்கள்."வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்" என்று பாட்டுப் பாடி எதிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

செலவுகள் பல வழிகளில் வந்தாலும் அதற்குத் தகுந்த வரவும் கிடைக்கும். திடமான சிந்தனையோடு காரியம் செய்யுங்கள். சபலப்பட்டு சங்கடங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

வீடு மனை வாங்கலாம். புதிய வீட்டிற்குக் குடிபோகலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத முட்டுக்கட்டைகள் தோன்றும்.

ஹெர்னியா, அப்பன்டிஸ் போன்ற சின்ன ஆபரேஷன்கள் செய்யும் நிலையும் ஏற்படலாம். குடும்பத்தின் மீது ஒரு பற்றுதல் இல்லாத நிலை உருவாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திடீரென்று ஏற்படும் மன அழுத்தத்தால் சிலருக்கு உறக்கம் வராது. தம்பதிகள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.. ஆனி மாதத்தில் அனுகூலங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். "கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு அமர்கிறான்" என்ற பழமொழி உண்டு.

ஆவேசமாகப் பேசுவதை அறவே விலக்கி விடுங்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வரும். தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம்.

சட்டம், பொறியியல். மருத்துவம் போன்ற தொழில்கள் வெற்றிகரமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். மன இறுக்கம் விலகி குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

வங்கியில் எதிர்காலத்திற்கான பணத்தை டெபாசிட் செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் சரளமாக வர ஆரம்பிக்கும். புதிய நண்பர்களால் இனிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு‌ மாணவர்கள் விரும்பிய பட்டப்படிப்புக்கு இடம் கிடைக்கும்.

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்த நீங்கள் சந்தோஷக் காற்றைச் சுவாசிக்கப் போகிறீர்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இடையூறுகளைக் கடந்து நடந்தேறும். பிரிந்து போன உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் தடம்பதித்து அதிக வருமானம் பெறுவீர்கள். தலைவலி, ரத்த அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். பெண்கள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னிலை வகிப்பார்கள்.  

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் உங்களுக்கு தோணி போல ஒரு நண்பர் கிடைப்பார். அவரின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கலை விரைந்து முடிப்பீர்கள்.

தொழிலுக்கு இருந்த இடையூறுகள் விலகினாலும் வியாபாரம் சுமாராகவே நடக்கும். நவீன பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். குடும்பத் தேவைக்காக வங்கிச் சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். கமிஷன் தொழில் கணிசமான லாபத்தைக் கொடுக்கும்.

ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். வாகனங்களில் போகும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் யோகமான பலன்களைக் அனுபவிக்கப் போகிறீர்கள். வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக நெஞ்சில் அலைமோதும். அதற்கான வாய்ப்பு வீடு தேடி வரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளியூர்ப் பயணங்கள் செல்வதன் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

பரம்பரை சொத்துக்களில் இருந்த வில்லங்கத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிப்பீர்கள். பிள்ளைகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள். அவர்களால் பிரச்சனை உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

பெண் பிள்ளைகளை உரிய வயதில் திருமணம் செய்ய முயற்சி எடுங்கள். படிப்பைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம். தொழிலுக்காக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த பணம் சில தடங்கல்களுக்குப் பின்னால் வந்து சேரும்.

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் இனிமையான பலன்களைச் சந்திக்கப் போகிறீர்கள். அரசாங்க வேலைகளுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழைச் சேர்ப்பீர்கள்.

தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். நிதி நிறுவனங்களில் அதிகமாக பணம் போட வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யாதீர்கள்.

கணவன்-மனைவி உறவைப் பேணுவதில் அக்கறை காட்டுவீர்கள். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தேவையில்லாமல் உறவினர்கள் வம்புக்கு இழுத்தால் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

உங்கள் தொழிலைக் கெடுக்க போட்டியாளர்கள் செய்யும் முயற்சிகள் பலிக்காது. பத்திரிகையாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். தாய் தந்தையர் பக்கபலமாக இருப்பார்கள். அலட்சியமாக எந்த வேலையையும் பார்க்க வேண்டாம். வெளியூரில் தங்கும்போது பொருட்களைப் பத்திரமாக வைத்திருங்கள்.

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் தேனீ போல சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். உங்கள் நிம்மதியைக் கெடுத்த வழக்குகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவானாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பார்கள்.

உங்களுடைய பேச்சாலும் செயலாலும் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தொழில் துறையில் அதிக முன்னேற்றம் ஏற்படும். சில காலமாக தொந்தரவு செய்து வந்த நோய் விலகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகள் புகழ் அடைவார்கள். புதிய முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் காணி நிலமாவது வாங்க வேண்டுமென்று கடினமாக உழைப்பீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக ஆசைப்பட்ட பொருளை இல்லத்தரசிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள்.

வெளிநாட்டில் இருந்து தக்க சமயத்தில் தொழிலுக்கு உதவி கிடைக்கும்.

பங்குச்சந்தை வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அனுகூலம் பார்க்க முடியாது. சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். கட்டுமானத் தொழில் விறுவிறுப்பாக நடக்கும்.

தினசரித் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைப்பார்கள். வேலையிடப் பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். மன நிம்மதியைக் கெடுத்து விடும். புதிய வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். வேலைப்பளுவால் அலைச்சல் அதிகமாகும்.

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் அற்புதமான பலன்களைப் பார்க்கப் போகிறீர்கள். தலையை அடகு வைத்தாவது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

உறுதியாக நின்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்குச் சங்கடத்தைத் தருவார்கள்‌. அரசு ஊழியர்களுக்கு இருந்த கெடுபிடியான நிலை மாறும்.

ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள் மேன்மையான பலனைக் காண்பார்கள். தொழிலில் கிடைக்கும் உபரி வருமானத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்களுக்கு ஜால்ரா போடும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். எவ்வளவுதான் அனுசரித்துப் போனாலும் கணவன்-மனைவிக்கிடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... ஆனி மாதம் ஏணியாக நின்று பல ஏற்றங்களைத் தரப்போகிறது. வருமானத்தை அதிகரித்து வசதியை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

முன்பு வாங்கிய சொத்தில் இருந்த வில்லங்கம் விலகிப் போகும். திருமணத்திற்காக வரன் தேடி வந்தவர்களுக்கு யோகம் உண்டாகும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் பொதுப் பிரச்சினையில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள்.

வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும் அலைச்சலும் ஏற்படலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை வந்து கஷ்டப்படுத்தலாம்.

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முழுக்கவனமும் சாலையில் இருக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மனதை அலைபாய விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அருமையான வாய்ப்புக் கிடைக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். படிப்பு, வேலை காரணமாக பிள்ளைகள் குடும்பத்தைப் பிரிய வேண்டிய நிலை உருவாகும். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

ஆசிரியர்கள், வழக்கறிஞர், ஆய்வாளர்கள் வேலைத் திறனால் மதிப்பை உயர்த்திக் கொள்வார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலம் இது. அரசு வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

மூட்டு வலி வந்து நடப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக புதிய முதலீடுகள் செய்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர் வீடு மாறி சென்று இம்சையை ஏற்படுத்துவார். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வெற்றி காண்பீர்கள்.

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே... ஆனி மாதத்தில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலன்களைக் கண்டிப்பாக அடைவீர்கள்‌.

அரசியல்வாதிகளின் அறிமுகத்தால் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் கூட நல்ல லாபம் பார்க்கும் காலம் இது. இழந்ததை அடையக் கூடிய அளவுக்கு ஏற்றமாக வருமானம் கிடைக்கும்.

பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகி மனநிம்மதி உண்டாகும். வங்கியிலிருந்து எதிர்பார்த்த நிதி உதவி தடங்கல் இல்லாமல் வந்து சேரும். போட்டி பந்தயங்கள் சிறப்பாக இருக்காது. ஆன்லைன் சூதாட்டம் கையிருப்பைக் காலி செய்துவிடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கவனக்குறைவால் சில நேரங்களில் விபத்து ஏற்படலாம். பட்டப்படிப்பு குறித்த மாணவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US