நடுங்க வைக்கும் லண்டன்... இரண்டு பெண்கள் உட்பட நால்வருக்கு ஏற்பட்ட துயரம்
லண்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன், நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பெண் ஒருவர் சடலமாக
வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4 மணியளவில் தென் லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பலத்த காயங்கள் காரணமாக இறந்திருக்கலாம் என்றே கூறப்பட்டது.
@PA
இந்த நிலையில் சுமார் 5 மணி நேரங்களுக்கு பின்னர், புனித சின்னப்பர் தேவாலயம் அருகே ஆண் ஒருவர் உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்தார். வியாழக்கிழமை சுமார் 5.30 மணியளவில் கிழக்கு லண்டனில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவத்தில் ஐவர் காயங்களுடன் தப்பினர். பொலிசார் பின்னர் வெளியிட்ட தகவலில், 16 வயதுடைய சிறுவன் ஒருவன், இந்த தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தெற்கு லண்டனில் ஒரு நபர் ஒரு குழு சண்டையின் போது கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பயங்கரமான கொள்ளை
வடமேற்கு லண்டனில் இரவு 9 மணியளவில் மற்றொரு நபர் பயங்கரமான கொள்ளை சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டார் என்ற தகவல் வெளியானது. வியாழக்கிழமை நள்ளிரவு கிழக்கு லண்டன் மேம்பாலத்தில் இருந்து பிரதான சாலையில் விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Image: Elliott Thompson
இந்த நிலையில், கிழக்கு லண்டனில் காலை 6 மணியளவில் தெரு சண்டையைத் தொடர்ந்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். ஒன்பது மணி நேரம் கழித்து மேற்கு லண்டனில் பட்டப்பகலில் மற்றொரு சண்டையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.