இங்கிலாந்தில் கபாப் கடையில் கண்டுபிடிக்கப்பட்ட பொறித்த எலி: அதிரவைத்த காட்சிகள்
இங்கிலாந்திலுள்ள கபாப் கடை ஒன்றை சோதனையிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகளைக் காண நேர்ந்தது.
கபாப் கடையில் கிடந்த பொறித்த எலி
இங்கிலாந்திலுள்ள Preston என்னுமிடத்தில் அமைந்துள்ள கபாப் கடை ஒன்றை சோதனையிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், எண்ணெயில் பொரித்தது போன்று காட்சியளித்த எலி ஒன்றைக் காண நேர்ந்துள்ளது.
Preston City Council / SWNS
தொடர்ந்து அந்த கடையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையில், சமையலறை, கரப்பான் பூச்சிகள் நிறைந்து மோசமான நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
அந்தக் கடைக்கு ஜீரோ ரேட்டிங் கொடுக்கப்பட்ட நிலையில், கடையை மூட அந்தக் கடையின் உரிமையாளரே ஒப்புக்கொண்டுள்ளார்.
Google / SWNS
கடையை சுத்தம் செய்து மீண்டும் திறக்கலாம் என அதிகாரிகள் அனுமதியளித்துள்ள நிலையில், மறுமுறை சோதனை செய்யும்போது கடை இதேபோல் இருந்தால், அப்போது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |