பட்டபகலில் சம்பவம்... லண்டன் மாணவி உடல் கருகி பலி: வெளியான முதல் புகைப்படம்
லண்டனில் டோல்கேட் சாலையில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில் பள்ளி மாணவி ஒருவர் பலியானதை அடுத்து, தற்போது அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுமி உடல் கருகி பலி
டோல்கேட் சாலையில் நேற்று உள்ளூர் நேரப்படி 5.24 மணியளவில் அந்த குடியிருப்பு நெருப்பில் சிக்கியது. இதில் 14 வயதான சிறுமி உடல் கருகி பலியானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
@PA
ஆனால் தற்போது அவரது பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றையும் பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. குறித்த மாணவியின் பெயர் டிஃபனி எனவும், பழகுவதற்கு இனிமையானவர் எனவும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று மாலை குறித்த வீட்டில் தீ பரவியதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் விருந்து ஒன்று நடந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த சம்பவம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
@PA
தீயணைப்பு வீரர்கள் சிறுமி டிஃபனியின் உடலை மீட்கும் போது, அவர் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தார் என்றே கூறுகின்றனர். அந்த குடியிருப்பில் இருந்து மேலும் ஐந்து பேர் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
16 வயது ஆண் கைது
அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வாகனங்களில் மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
@PA
இச்சம்பவம் திட்டமிட்டு நெருப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 16 வயது ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.