பிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத உச்சம்... சட்டங்களைக் கடுமையாக்க கோரும் குடும்பங்கள்
பிரித்தானியாவில் சமீப மாதங்களில் மட்டும் 12 பேர் நாய் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், விதிகளை கடுமையாக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக நாய்களால் தாக்கப்பட்டு மக்கள் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் மட்டும் நான்கு வயது சிறுமி ஆலிஸ் ஸ்டோன்ஸ் உட்பட இருவர் கொடூரமாக தாக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.
@thesun
சிறுமி ஆலிஸ் ஸ்டோன்ஸ் தங்கள் வளர்ப்பு நாயால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 12ம் திகதி 28 வயதான நடாஷா ஜான்ஸ்டன் என்பவர் சர்ரே பகுதியில் நாய்கள் கூட்டம் ஒன்று சுற்றிவளைத்து தாக்கியதில் பரிதாபமாக பலியானார்.
2022ல் மட்டும் நாய்களால் 10 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதுடன், கடந்த 12 மாதங்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்ட தரவுகளில், 2022ல் நாய் தாக்குதலில் நால்வர் மட்டுமே பலியாகியுள்ளதாகவும், 2020ல் இருவரும், 2019ல் மூவரும் 2018ல் வெறும் ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடுமையான விதிகள் வேண்டும்
அதாவது 2018 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023 மிக மோசமான தொடக்கமாக உள்ளது எனவும் இதுவரை நாய் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
@thesun
சமீப மாதங்களில் நாய்களால் தாக்குதல் எண்ணிக்கை அதிகரிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடுமையான விதிகளை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் திகதி நாய் தாக்குதலுக்கு இலக்கான 83 வயது ஷெர்லி பேட்ரிக் 17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து, பின்னர் மரணமடைந்தார்.
அவரது மகள் தெரிவிக்கையில், நாய் வளர்ப்பு தொடர்பில் சட்டங்களை உடனடியாக கடுமையாக்க வேண்டும் என கோரியுள்ளார்.