கட்டுப்பாட்டை இழந்து திமிறிய குதிரை.. முடிசூட்டு விழாவில் நடந்த அசம்பாவிதம்: வைரலாகும் வீடியோ
பிரித்தானியாவில் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில் அணி வகுப்பிலிருந்த குதிரை திமிறியதால், நடந்த அசம்பாவிதத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மன்னர் முடிசூட்டு விழா
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், நேற்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
@pti
உலக நாடுகளிலுள்ள அனைவரும் இவ்விழாவை இணையம் மூலம் கண்டு ரசித்து கொண்டாடினர். முடிசூட்டு சார்லஸ் அவர்களின் மனைவியான கமலா ராணியாக பதவியேற்கப்பட்டார்.
@pa
இந்நிகழ்வில் குதிரை அணி வகுப்பு, மூன்றாம் அபேயில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலம் என கோலாகலமாக நடைபெற்றது. சாலையின் இருபக்கமும் இருந்த மக்கள் மன்னர் சார்லஸ் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவின் போது கட்டுப்பாட்டை இழந்த குதிரை, அங்கு ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் கூட்டத்தின் மீது குதிரை மோதியதை வீடியோ காட்டுகிறது.
During today's coronation of the British King Charles the Third, an agitated horse, which was part of the royal procession, ran into the audience watching the event on the streets of London pic.twitter.com/29RXPOwK2e
— Spriter (@Spriter99880) May 6, 2023
முடிசூட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த குதிரை ஒன்று கூட்டத்தை கண்டு பயந்ததனால், திமிறி தன் கட்டுபாட்ட்டை இழந்து அங்கிருந்த கூட்டத்தின் மீது மோதுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை ஏற்றிச் சென்ற கோல்ட் ஸ்டேட் கோச்சின் பின்னால், ராஜாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் குதிரை ஏறக்குறைய மோதியுள்ளது.
ஆனால் யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் முடிசூட்டு விழாவில் நடைபெற்ற இச்சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.