பிரித்தானியா மருத்துவமனைகளில் இது தான் நிலைமை! போட்டுடைத்த மருத்துவர்
பிரித்தானியா மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்க கவுன்சிலின் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் எச்சரித்துள்ளார்.
டாக்டர் சாந்த் நாக்பால் கூறியதாவது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனயைில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, இந்து ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதம் ஊரடங்கின் போது இருந்த அளவிற்கு உச்ச கட்டத்தில் இருக்கிறது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைவாக இருந்தாலும், நிச்சியமாக குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் நான் காண்கிறோம்.
கிறிஸ்மஸுக்கு முன்னதாக நான்கு வாரங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 25,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது NHS காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆறு மில்லியன் மக்கள் சிகிச்சை பெறுவதை பாதிக்கின்றன என டாக்டர் சாந்த் நாக்பால் தெரிவித்துள்ளார்.