மருத்துவமனையில் சிகிச்சைக்கு தாமதம் ஆனதால் தாக்குதலில் இறங்கிய நோயாளி: 13 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர், தனக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் கோபத்தில் அங்கிருந்தவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார்.
அமைச்சர் தலையீடு
பிரெஞ்சு நகரமான Annemasseஇல், சகோதார்கள் இருவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
அவர்களில் ஒருவருக்கு வேலை செய்யும் இடத்தில் வைத்து காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அவருக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆகியுள்ளது. அதனால் கோபத்தில் அவர் அங்கிருந்தவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார். விளைவு?
Hôpital Privé Pays de Savoie
13 பேர் காயமடைந்துள்ளார்கள்!
இந்த விடயம் பெருமளவில் கவனம் ஈர்த்ததால், பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Yannick Neuder பிரச்சினையில் தலையிடும் நிலை ஏற்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டவருக்கு சரியான தண்டனை வாங்கித்தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.