காசா மருத்துவமனை மீது தாக்குதல்: முழு விசாரணை கோரும் சுவிட்சர்லாந்து
காசாவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு, சுவிட்சர்லாந்து முழு விசாரணை கோரியுள்ளது.
மருத்துவமனை மீது தாக்குதல்
காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த துயர சம்பவம் குறித்து எக்ஸில் கருத்து தெரிவித்துள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், காசாவில் மருத்துவமனை ஒன்றின் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் எல்லா நேரங்களிலும் மருத்துவமனைகளும் பொதுமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சுவிட்சர்லாந்து நினைவு கூர்கிறது என்று கூறியுள்ளது.
BNN Breaking
செவ்வாயன்று அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் Ashraf al-Qudra தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இல்லையென இஸ்ரேல் மறுத்துள்ளது.
காசாவிலுள்ள அந்த மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானபோது, அங்கு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
aa.com
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |