நெடுஞ்சாலையில் இருந்த கண்ணுக்கு தெரியாத பள்ளம்: மருத்துவமனை மேலாளருக்கு நேர்ந்த சோகம்
உத்தர பிரதேசத்தின் நெடுஞ்சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து மருத்துவமனை மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் இருந்த பள்ளம்
ஞாயிற்றுக்கிழமை இரவு நோய்டா நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்ற பரிதாபாத்தைச் சேர்ந்த 45 வயது மருத்துவமனை மேலாளர் அதுல் குமார் ஜோஷி மஞ்வாலி பாலத்தின் அருகே திடீரென முடிவடைந்த நெடுஞ்சாலை அருகே இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பள்ளம் இருந்த பகுதியில் எந்தவொரு முன்னெச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ அல்லது விளக்கு வெளிச்சங்களோ இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

2 வல்லரசு நாடுகளின் 2 சக்திவாய்ந்த போர் விமானங்கள்: ஒரே நாளில் விபத்துக்குள்ளானதால் அதிர்ச்சி: வீடியோ
விபத்து நடத்து 8 முதல் 9 மணி நேரம் கழித்து அதிகாலை வயலுக்கு சென்ற விவசாயிகள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அதுல் குமார் ஜோஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு மருத்துவமனை மேலாளர் அதுல் குமாரின் உடலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |