கமல்ஹாசன் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 22ம் திகதி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
#KamalHaasan sir is recovering well. pic.twitter.com/7raxAkY98O
— MNM Dharmapuri District (@MNMDharmapuriAC) November 26, 2021
அதில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்.
அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.