நான்கு வாரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்... Omicron பரவல் தொடர்பில் NHS ஊழியர்கள் கலக்கம்
பிரித்தானியாவில் Omicron பரவல் அதிகரித்துவரும் நிலையில் இன்னும் நான்கு வாரத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் NHS ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை திருப்பி அனுப்புவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் குறித்த தகவலானது முற்றிலும் தவறானது என அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில் NHS ஊழியர்கள் விடுமுறையை எதிர்பார்க்கலாம் எனவும், இது ஜனவரி 15 வரையில் நீடிக்கலாம் எனவும் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளை கவனிக்க ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஊழியர்கள் பற்றாக்குறையால் உணவங்கள், வணிக ஸ்தாபனங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவைகள் மூடப்படும் சூழலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை எந்த மருத்துவமனையும் நோயாளிகளை திருப்பி அனுப்பும் சூழலில் இல்லை என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. தற்போதைய தரவுகளின் அடிப்படையில் 10 பேர்கள் மட்டும் ஓமிக்ரான் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு மேலதிக கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு அழுத்தம் இருக்கும் என்பது உண்மை தான், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஊழியர்கள் கண்டிப்பாக ஓய்வின்றி உழைக்க நேரிடும். இருப்பினும் அப்படியான சூழலை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயாராக இருப்பதாக கண்காணிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
My letter to everyone working in the NHS. pic.twitter.com/MzEqVdZ8m4
— Boris Johnson (@BorisJohnson) December 14, 2021
இந்த நிலையில் தான் NHS ஊழியர்கள் அனைவருக்கும், அவர்களின் சேவையை பாராட்டியும் இக்கட்டான சூழலில் உதவும் நெஞ்சுரத்திற்கும் நன்றி தெரிவித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.