கனடா பிரதமரை ஜனாதிபதி என அழைத்த ட்ரம்ப்: ஒரு சுவாரஸ்ய வீடியோ
கனடா பிரதமரை, கனடாவின் ஜனாதிபதி என ட்ரம்ப் அழைத்ததைக் காட்டும் சுவாரஸ்ய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ட்ரம்பை கிண்டல் செய்த கனடா பிரதமர்
எகிப்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு உச்சி மாநாட்டின்போது, கனடா பிரதமரான மார்க் கார்னியை தவறுதலாக கனடாவின் ஜனாதிபதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்தார்.
ட்ரம்பின் உரை முடிந்ததும் மேடையிலேயே அவரை சந்தித்த கார்னி, ஜனாதிபதியாக எனக்கு பதவி உயர்வு கொடுத்ததற்கு நன்றி என கிண்டலாகக் கூறினார்.
தன் தவறை உணர்ந்தாலும், ட்ரம்பும் கொஞ்சமும் சளைக்கவில்லை. பதிலுக்கு, உங்களை கவர்னர் என அழைக்காமல் விட்டேனே அதற்காக சந்தோஷப்படுங்கள் என்றார்.
WATCH: Hot mic exchange between President Trump and PM @MarkJCarney.
— TrendingPolitics.ca (@TrendPolCa) October 13, 2025
Carney: “I’m glad you upgraded me to President.”
Trump: “At least I didn’t call you Governor.”pic.twitter.com/phneCXyGoZ
அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |