அதிகரித்த வெப்பம்... மருத்துவமனைகளை நாடும் பிரித்தானியர்கள்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பிரித்தானியாவில் கடுமையான வெப்பம் காரணமாக மருத்துவமனைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில பகுதிகளில் 30 டிகிரி வெப்பம்
பெரும்பாலான மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் வெப்பம் 20 டிகிரி தாண்டலாம் எனவும் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 30 டிகிரி தாண்டவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
? Our heat health alert has been extended for all regions in England until 9am Monday 19 June.
— UK Health Security Agency (@UKHSA) June 13, 2023
Stay up to date with the latest weather alerts from @metoffice ☀
More info on staying cool & safe in the hot weather: https://t.co/RmnFr5YRcH #WeatherAware pic.twitter.com/LFUSojzE3k
இந்த நிலையில் தான், அதிக வெப்பம் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்ததாக NHS மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் ஒன்றில், ஜூன் 19ம் திகதி வரையில் மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிழக்கு சசெக்ஸில் உள்ள பல பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்பட்டன. மஞ்சள் எச்சரிக்கை என்பது 65 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் அல்லது ஏற்கனவே சிகிச்சையில் உள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உடல் நலனில் கூடுதல் கவனம்
மேலும், சுவாச மற்றும் இருதய நோய்கள் தொடர்பில் சிகிச்சையில் இருக்கும் முதியவர்கள் அல்லது நோயாளிகள் தங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
@PA
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அக்கம்பக்கத்தினர் எவரேனும் சிகிட்ச்சையில் இருந்தால், அல்லது வெப்பம் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்படும் சூழலில் இருப்பார்கள் எனில், தேவையான ஆலோசனையைப் பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |