குறைந்தளவு முதலீடு.., லாபங்களை குவிக்கும் ஹொட்டல் வணிகம்
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதுபோல பலரும் பல தொழில்கள் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.
இதில் மிக முக்கியமான தொழிலாக பார்க்கப்படுவது ஹொட்டல் வணிகம்.
எப்போதுமே இந்த தொழிலுக்கு அதிக Demand தான். இந்த உலகில் அனைவருக்கும் தேவைப்படுவது உணவு தான்.
அதனால் நீங்கள் சொந்தமாக ஒரு உணவகம் தொடங்கலாம்.
ஹொட்டல் தொடங்குவதற்கு முன் திட்டம்
முதலில் உங்கள் கடையை திறப்பதற்கு திட்டமிட வேண்டும்.
இந்தத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
தொடங்கும் உணவகம் சொந்த கடையாகவும் இருக்கலாம், வாடகைக் கடையாகவும் இருக்கலாம, அல்லது தள்ளு வண்டியிலும் தொடங்கலாம்.
தொடங்கும் இந்த உணவகம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொடங்குவது நல்லது. அப்போது தான் மக்கள் அதிகம் கடையை நாடி வருவார்கள்.
உணவகம் தொடங்க நினைப்பவர்கள் தரம், அளவு, சுத்தம், விலை ஆகிய நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடங்கும் உணவகம் எப்பொழுதும் தூய்மையாகவும் காற்றோட்ட வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
உணவகத்தில் வழங்கும் உணவுகள் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அதிகமாக கடைக்கு வருவார்கள்.
ஹொட்டல் தொடங்க முதலீடு
நீங்கள் தொடங்கும் உணவகம் சிறிய கடையாக இருந்தால் அதற்கு கடை வாடகை மற்றும் மற்ற செலவுகளை சேர்த்து 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
நீங்கள் தொடங்கும் கடையின் அளவை பொறுத்து முதலீடு மாறுபடும்.
உணவகம் தொடங்க ஆவணங்கள்
- உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து உணவகம் திறக்க அனுமதி பெற வேண்டும்.
- வணிகக் காப்பீடு பெற வேண்டும்.
- ஹொட்டல் உரிமம் மற்றும் உணவு வழங்குவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு தனிப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சட்ட நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- வர்த்தக காப்புரிமை மற்றும் SES -லிருந்து அறிவிப்பு பெற்றிருக்கவேண்டும்.
- உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்
உணவகத்தை மக்கள் அதிகம் உள்ள ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கோவில், பள்ளி மற்றும் மருத்துவமனை போன்ற பகுதிகளில் வைத்தால் தினமும் நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த தொழிலை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தொடங்கலாம்.
விளம்பரம்
சுவை, மணம், தரம், தூய்மை ஆகிய சிறப்பம்சங்கள் கொண்டதாக ஹொட்டல் பிசினஸ் இருந்தாலும், இன்றைய சூழலில் விளம்பரம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஒரு நிறுவனம் மக்கள் மத்தியில் அறியப்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு வகையில் பப்ளிசிட்டி என்ற விஷயம் தேவைப்படுகிறது.
அதற்கு ஏற்ப, பிளக்ஸ் பேனர்கள், சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள், இணையதளம் போன்றவற்றில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர முடியும்.
மேலும், இலவசமாக டோர் டெலிவரி செய்வது, சுப நிகழ்ச்சிகளுக்கு செய்யப்படும் உணவு சப்ளையை குறைந்த கட்டணத்தில் அளிப்பது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை தொடக்கத்தில் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |