ஹொட்டல்கள் முதல் பாடசாலை வரை... CSK பிரபலத்தின் வெளியே அறியப்படாத தொழில் முதலீடுகள்
இந்தியாவின் பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் CSK நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். தோனியின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 1040 கோடிக்கும் அதிகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பல நிறுவனங்களில் முதலீடு
கிரிக்கெட் ஊடாக திரட்டிய பணத்தை அவர் பல்வேறு தொழில் தொடங்கவும், பல நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பயன்படுத்தியுள்ளார். Seven என்ற தமது ஆயத்த ஆடை நிறுவனம்,
விளையாட்டு நிறுவனம் ஒன்று அத்துடன் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் என்பதையும் தாண்டி CSK நட்சத்திரம் மகேந்திர சிங் தோனி வெளியே அறியப்படாத பல்வேறு தொழில்களில் முதலீடுகளை முன்னெடுத்துள்ளார்.
சொந்த ஊரான ராஞ்சியில் ஹொட்டல் மஹி என்ற பெயரில் உணவகம் ஒன்றை நிறுவியுள்ளார். பெங்களூருவில் தோனி சர்வதேச பாடசாலை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா பங்குதாரராக உள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரியாக
7Ink என்ற பெயரில் குளிர்பான நிறுவனம் ஒன்றும் சாக்லேட் நிறுவனம் ஒன்றும் தோனிக்கு சொந்தமாக உள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் 200 நகரங்களில் Sportsfit என்ற பெயரில் உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார்.
மட்டுமின்றி பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றை துவஙியுள்ள தோனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக தமது மாமியாரை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |