பிரித்தானியாவில் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள் இது தான்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரித்தானிய மக்கள் நீண்ட விடுமுறை நாட்களை கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெப்பநிலை 24C என அதிகரிக்கலாம்
பொதுவாக எதிர்வரும் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கூறுகின்றனர்.
இருப்பினும், எதிர்வரும் ஞாயிறன்று, இந்த ஆண்டில் பதிவான மிக வெப்பமான நாளாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அன்றைய நாள் வெப்பநிலை 24C என அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று இதுவரை பதிவான மிக வெப்பமான நாளாக 23.3C என வெப்பம் பதிவாகியிருந்தது.
Shutterstock
தற்போது எதிர்வரும் ஞாயிறன்று அந்த சாதனை முறியடிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 20C அளவுக்கே இருக்கும் எனவும் சில பகுதிகளில் குறைவாக பதிவாகவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.