லண்டனில் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் முதலான விவரங்கள் வெளியாகின
லண்டனில், வீடு ஒன்று தீப்பிடித்ததில், தீயில் சிக்கி ஒரு தாயும் அவரது மூன்று பிள்ளைகளும் பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தாயும் பிள்ளைகளும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரவு 10.30 மணியளவில், மேற்கு லண்டனிலுள்ள Hounslow என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றியது.
10 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடியும், மறுநாள் அதிகாலை 1.25 மணியளவில்தான் தீயை அணைக்கமுடிந்துள்ளது.
Image: UKNIP
வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் முதல் தளத்தில், ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும், மற்றொரு நபரும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அந்த வீட்டில், Aroen Kishen, Seema Kishen என்னும் தம்பதியர், அவர்களுடைய பிள்ளைகளான Riyan, Shanaya மற்றும் Arohi என ஐந்துபேர் வாழ்ந்துவந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று தீபாவளிப்பண்டிகை என்பதால், அவர்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் இருவர் வந்துள்ளனர்.
Image: UKNIP
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள்
வீடு தீப்பற்றியதில், தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள், Seema மற்றும் தம்பதியரின் பிள்ளைகளான Riyan, Shanaya, Arohi, மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தினர்களில் ஒருவர் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஒரு விருந்தினரின் பெயர் வெளியிடப்படவில்லை. அத்துடன், அவருடன் வந்த மற்றொருவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
Image: Humphrey Nemar
குழந்தைகளின் தந்தையான Aroen Kishenஐ, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அக்கம்பக்கத்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம்
சம்பவம் நடந்த தினம் தீபாவளிப்பண்டிகை என்பதால், பட்டாசுகள் வெடித்து தீப்பற்றிருக்கக்கூடும் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், Kishenஉடைய மனைவியின் சகோதரரான Dileep Singh என்பவர், வீட்டுக்கு வெளியிலிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் பிடித்த தீ, வீட்டில் பரவியதாக தனக்குக் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Image: Zahra/Mirrorpix
மேலும், முதலில் Kishen குடும்பத்தினர் இந்திய வம்சாவளியினர் என செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் ஆப்கன் நாட்டவர்களான இந்துக்கள் என சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |