லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது
மேற்கு லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் ஏற்கனவே மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது 71 வயதான நாலாவது நபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞர்
மேற்கு லண்டனில் 17 வயதான இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞர் Simarjeet Singh கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், படுகாயங்களுடன் இளைஞரை மீட்டுள்ளனர்.
ஆனால் காயங்கள் காரணமாக சம்பவயிடத்திலேயே இளைஞர் Simarjeet Singh மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் Southall பகுதியை சேர்ந்த 21 வயது அமந்தீப் சிங், 27 வயது மஞ்சித் சிங், மற்றும் 31 வயது அஜ்மீர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், 71 வயதான போரன் சிங் என்பவரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சமீப காலத்தில் நடந்ததில்லை
சம்பவம் நடந்த பகுதியானது மிகவும் அமைதியான, இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் நடந்ததில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு பலர் கண்விழித்துள்ளதாக கூறியுள்ளனர்.
அவர்களே பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். 17 வயதேயான Simarjeet Singh மீது குழு சேர்ந்து தாக்குதல் முன்னெடுத்துள்ளதன் பின்னணி குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் தகவல் தெரியவரும் பொதுமக்கல் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |