பிரித்தானியா வரும் இளவரசர் ஹரிக்கு வீட்டுச்சிறை? முடிசூட்டுவிழாவையொட்டி வெளியாகியுள்ள தகவல்
இளவரசர் ஹரி, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக பிரித்தானியா வரும்போது, வீட்டுச்சிறை போன்ற சூழலில் இருக்க நேரிடும் என முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
அதாவது, 2020ஆம் ஆண்டு, ராஜ குடும்ப பொறுப்புகளை உதறி, தன் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார் இளவரசர் ஹரி. அப்படி அவர் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவாரானால், அவருக்கு மக்களுடைய வரிப்பணத்தை பயன்படுத்தி பாதுகாப்பளிக்கமுடியாது என கூறப்பட்டதையடுத்து, அவருக்கும் உள்துறை அலுவலகத்துக்கும் இடையில் வழக்கு ஒன்று பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
image credit:ABC
இளவரசர் ஹரிக்கு பிரித்தானியாவில் வீட்டுச்சிறையா?
இப்படியிருக்கும் ஒரு நிலையில், இளவரசர் ஹரி மன்னருடைய முடிசூட்டுவிழாவுக்காக பிரித்தானியா வர இருக்கிறார். அப்படி அவர் பிரித்தானியாவுக்கு வரும்போது, அவர் வீட்டுச்சிறை போன்றதொரு சூழலில் பிராக்மோர் இல்லத்துக்குள் அடைந்திருக்கவேண்டிய நிலை உருவாகலாம் என்கிறார், ராஜ குடும்பத்தின் பாதுகாப்புக்கான முன்னாள் பொலிஸ் அதிகாரியான Dai Davies.
அதாவது, இளவரசர் ஹரி முடிசூட்டுவிழாவில் பங்கேற்கும்போது, அவருக்கு பொலிஸ் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு அளிப்பார்கள். ஆனால், அவர் வேறெங்காவது செல்ல விரும்பினால், அப்போது அவருக்கு பிரித்தானிய பொலிசார் பாதுகாப்பு அளிக்கமாட்டார்கள், இளவரசர் ஹரிதான் தனக்கான பாதுகாப்புக்காக பணம் செலவுசெய்து ஆட்களை ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்