பட்டப்பகலில் நடந்த கொடூரம்... மூன்று பிள்ளைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த லண்டன் தம்பதி
லண்டன் புறநகர் பகுதியில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
அவர்கள் மூவரின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது என்றே பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஜூலை 13ம் திகதி நடந்த அந்த கோர சம்பவத்தில் பாடசாலை மாணவர்களான 13 வயது நகாஷ் மாலிக், அவரது சகோதரி 11 வயது ஆயத் மாலிக், மற்றும் இவர்களது சகோதரர் 7 வயதான முகமது ஹனான் மாலிக் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
ஈஸ்ட் ஹாம் பகுதியில் அமைந்துள்ள இவர்களது குடியிருப்பானது பகல் 8.30 மணிக்கு தீ விபத்தில் சிக்கியது. இதில் சிறார்கள் மூவரும் சிக்கி, மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளைக் குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்கொட்லாந்து யார்டு தெரிவித்துள்ளது.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், சிறார்களில் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாகவும், எஞ்சிய இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அல்லது மருத்துவமனையில் இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
துயரத்தை பகிர்ந்துகொள்ள
இந்த சம்பவத்தில் நியூஹாம் மேயர் ரோக்சனா ஃபியாஸ் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், துயரத்தை பகிர்ந்துகொள்ள வார்த்தைகளே இல்லை என்றும், ஒரு சமூகமாக ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து என்ன செய்யும் என்ற அதிர்ச்சி மற்றும் திகிலில் இருந்து விடுபடுபட முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்ததும் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களும் 40 வீரர்களும் கடுமையாக போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் வீட்டின் தரை தளமும், முதல் தளத்தின் பாதியும் எரிந்து மொத்தமாக சேதமடைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |