அவுஸ்திரேலியாவின் தீவில் துயர சம்பவம்! ஒரு குழந்தை மரணம்.. 3 குழந்தைகளின் நிலை பரிதாபம்
அவுஸ்திரேலியாவின் தீவான டாஸ்மேனியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பலியாக, 5 பேர் படுகாயமடைந்தனர்.
தீப்பற்றி எரிந்த வீடு
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் டாஸ்மேனியாவின் கிழக்கு ஹோபார்ட்டின் ரோக்பியில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது.
இதில் சிக்கிய ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 4 குழந்தைகள் மற்றும் நபர் ஒருவர் என ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இறந்து கிடந்த குழந்தை
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் டாஸ்மேனியா காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "காவல்துறை மற்றும் டாஸ்மேனியா தீயணைப்பு வீரர்கள் வந்தபோது வீடு முழுமையாக எரிந்து கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை வீட்டிற்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மற்றொரு இளம் குழந்தை மற்றும் ஒரு பெரியவர் பலத்த காயங்களுடன் ராயல் ஹோபார்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும், இரங்கலும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |