பிரித்தானியாவில் நான்கு இளம் சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்... தாயார் குற்றவாளி
பிரித்தானியாவில் இரட்டையர்களான நான்கு இளம் வயது மகன்களை தனியாக விட்டுவிட்டு தாயார் கடைக்கு சென்ற விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு
தெற்கு லண்டனின் Sutton பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் சில நாட்கள் முன்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
29 வயதான தெவெகா ரோஸ் தமது பிள்ளைகள் நால்வரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு Sainsbury's இல் இருந்து அப்போது அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்க வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே வீட்டு தீ விபத்தில் சிக்கியுள்ளது. நீதிமன்ற விசாரணையில் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டு அல்லது தலைகீழாக சரிந்த விளக்கு தரையில் மலைபோல குவிந்து கிடந்த குப்பை மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி சுமார் 7 மணியளவில் வீடு தீ விபத்தில் சிக்கியுள்ளது. பிள்ளைகள் நால்வரும் அலறும் சத்தம் அப்பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது. ஆனால், அவர்களால் வெளியேற முடியாதவாறு வீடு பூட்டப்பட்டிருந்தது.
ஒரு கட்டிலுக்கு அடியில்
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் குவிந்தனர். போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து, வீட்டுக்குள் நுழைந்த வீரர்கள், நான்கு சிறுவர்களும் மூச்சு பேச்சின்றி ஒரு கட்டிலுக்கு அடியில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நால்வரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் 8.40 மணிக்கு இருவரும் 9.12 மற்றும் 9.36 மணிக்கு எஞ்சிய இருவரும் மரணமடைந்துள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது தாயார் தெவெகா ரோஸ் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |