அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.190 கோடி.., இந்தியாவில் எங்குள்ளது?
டிஎல்எப் கேமிலியாஸ் (DLF Camellias) என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு வீடு ரூ.190 கோடி
இந்திய தலைநகர் டெல்லியில், குர்கானில் கட்டப்பட்ட டிஎல்எப் கேமிலியாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு சதுர அடி ரூ.1.8 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
இதனால், இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வீடாக இது கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் மும்பையில் தான் அதிக விலைக்கு வீடுகள் விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
அங்கு, சதுர அடிக்கு ரூ.1.62 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது குர்கானில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை மும்பை விலையை மிஞ்சிவிட்டன.
இங்கு கட்டப்பட்டுள்ள டிஎல்எப் கேமிலியாஸ் (DLF Camellias) என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இன்போ-எக்ஸ் மென்பொருள் நிறுவனம் (Info-x Software Tech Pvt Ltd) அதன் இயக்குநர் ரிஷி பாரதி மூலமாக, அதன் 16,290 சதுர அடி கொண்ட வீட்டை டிஎல்எப் கேமிலியாஸ் குடியிருப்பில் ரூ.190 கோடிக்கு வாங்கியுள்ளது.
இங்கு கார்பட் ஏரியா அடிப்படையில் ஒரு சதுர அடி ரூ.1.82 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்துடன், சொத்துக்கான முத்திரை கட்டணமாக ரூ.13 கோடி செலுத்தியது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மும்பை லோதா மலபார் பகுதியில் 3 வீடுகளை ரூ.263 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |