பாரீஸ் மேயர் தேர்தல்... வெற்றியை முடிவு செய்யும் முக்கிய விடயம்
பிரான்சில், 34,875 மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், முதல் சுற்றுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
குறிப்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கான மேயர் யார் என்பதை மக்கள் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்ய இருக்கிறார்கள்.
வெற்றியை முடிவு செய்யும் முக்கிய விடயம்
இந்நிலையில், பாரீஸைப் பொருத்தவரை, ஒரு விடயம் தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் முக்கிய விடயமாக அமைந்துள்ளது. அது வீடுகள் பிரச்சினை!

பாரீஸில் வீடுகள் விலை எக்கச்சக்கம். ஆகவே, பல குடும்பங்கள் வாடகை வீடுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
பாரீஸில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெறுமையாக கிடக்கின்றன. ஆனால், வாடகைக்கு வீடு தேடுவோருக்கு வீடு கிடைக்கமாட்டேன்கிறது.
விடயம் என்னவென்றால், பாரீஸிலுள்ள வீடுகளில் பலவற்றை பணக்காரர்கள் வாங்கி வைத்துள்ளார்கள்.
அதாவது, அவர்களுக்கு ஏற்கனவே வேறு வீடு இருக்கும் நிலையிலும், இரண்டாவதாக ஒரு வீட்டை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் இந்த பணக்காரர்கள்.
அதற்குக் காரணம் என்னவென்றால், பாரீஸ் உலக அளவில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒரு நகரமாக அமைந்துள்ளது.
ஆக, சுற்றுலாப்பயணிகள் வரும்போது அவர்கள் தங்குவதற்கு வீடு வேண்டும். இந்த வீடுகளை அவர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும்போது, ஒன்று, அவர்கள் கூடுதல் வாடகை கொடுப்பார்கள். இரண்டு, அவர்கள் குறைந்த காலம் மட்டுமே வீட்டில் தங்குவார்கள்.
எனவே, குடும்பங்களுக்கு பல ஆண்டுகளுக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பதை விட, இப்படி சுற்றுலாப்பயணிகளுக்கு வீடு வாடகைக்கு விடுவதை அந்த வீடுகளின் உரிமையாளர்கள் விரும்புகிறார்கள்.
அவ்வகையில், குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள், எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள வீட்டு வாடகை மற்றும் விலை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பார் என மக்கள் நம்பும் வேட்பாளருக்குத்தான் இம்முறை மக்கள் வாக்கு!
ஆக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை முடிவு செய்யும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக, வீடுகள் பிரச்சினை அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |