சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை கணிசமாக உயரும்: வங்கி கணிப்பு
சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் கணிசமாக உயரும் என வங்கி ஒன்று கணித்துள்ளது.
வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறையும்
சுவிட்சர்லாந்தில், 2024வாக்கில் காலியாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை, அதாவது வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் கீழே குறையும் என Raiffeisen வங்கி என்னும் வங்கி தெரிவித்துள்ளது.
அதனால், மக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகைகள் உயரும்
வீடு கட்டுவதற்கான செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வட்டி வீதம் ஆகியவை காரணமாக, புதிதாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மக்கள் தொகையோ தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆக, வீடுகள் குறைவு, மக்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பு என உருவாகியுள்ள சூழலால் புதிய பிரச்சினை ஒன்றுக்கு அது வழிவகுக்கிறது.
அதாவது, வாடகைகள் உயர்வுக்கு இந்த விடயம் வழிவகுக்கிறது.
image - Jan Gajdosik | Dreamstime.com
இப்போதைக்கும் 2024க்கும் இடையில், காலியாக இருக்கும், அதாவது வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் கீழே குறைய உள்ளது. ஆகவே, வாடகைக்கு வீடு தேடுவோர் கடினமான ஒரு காலகட்டத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என Raiffeisen வங்கியின் பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்த காலகட்டத்தில் வீடு மாற்றுவோர் அதிக வாடகை கேட்கும் வீட்டு உரிமையாளர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
அத்துடன், ஏற்கனவே வீடு லீஸுக்கு எடுத்துள்ளவர்களும் கூடுதல் லீஸ் தொகை செலுத்துமாறு வற்புறுத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறது Raiffeisen வங்கி.