சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்குக் காரணம் இவர்கள்தானாம்...
சுவிஸ் மாகாணமொன்றில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நின்றது குறித்த செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்குக் காரணம் இவர்கள்தானாம்...
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்பதை விளக்கும் ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
தங்களுக்குத் தேவையானதைவிட பெரிய வீடுகளில் வாழும் பணி ஓய்வு பெற்றோர்தான் வீடு தட்டுப்பாட்டுக்கு காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. Raiffeisen வங்கி மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் இப்படிக் கூறுகின்றன.
தாங்கள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்துவந்த வீட்டில், பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகி வேறு வீடுகளுக்குச் சென்றுவிட்டபிறகும் கூட தொடர்ந்து வாழ்வதையே, வயதானவர்கள் பலர் விரும்புகிறார்கள்.
ஆனால், பிள்ளைகள் வெளியேறியபின், அந்த வீடுகளிலுள்ள பல அறைகள் பயன்படுத்தப்படாமல் விடப்படுகின்றன.
வீடு தட்டுப்பாட்டை தீர்க்க என்னவழி?
ஆக, வயதானவர்கள், தங்கள் தேவைக்கு போதுமான அலவிலான வீடுகளில் குடியேறுவதே வீடு தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கான வழி என்கிறது அந்த ஆய்வு. அப்படி அவர்கள் தேவைக்கு மிஞ்சிய பெரிய வீடுகளை விட்டு விட்டு, தங்களுக்கு சரியான அளவிலான வீடுகளுக்கு குடிபெயர்வார்களானால், அவர்கள் விட்டுச் சென்ற வீடுகளில் சுமார் 450,000 பேர் குடியேறலாமாம்.
இதற்கிடையில், பல நாடுகளைப்போலவே சுவிட்சர்லாந்திலும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில், கூடவே அதிகரித்துவரும் புலம்பெயர்தல், குறைந்த அளவிலேயே புதிய வீடுகளைக் கட்டுதல் ஆகிய விடயங்களும், மேலும் வீடு தட்டுப்பாடு பிரச்சினையை மோசமாக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |