பிரித்தானியாவுக்கு சொந்தமான கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதல்: பரபரப்பு வீடியோ
பிரித்தானியாவுக்கு சொந்தமான “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரித்தானிய டேங்கர் கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது செங்கடல் வழியாக சென்ற பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
#Houthi #Yaman meledakkan sebuah kapal tanker #Inggris.
— Vindyarto (@Vindyartop) October 3, 2024
Rekaman itu menunjukkan serangan terhadap kapal tanker minyak #CordeliaMoon menggunakan kapal penangkap ikan kamikaze dengan muatan bahan peledak.
Penjaga bersenjata di kapal tanker tidak dapat menghentikan serangan. pic.twitter.com/82Mu4HeRv4
மேலும் காமிகேஸ் ட்ரோன் கப்பல் மூலம்(kamikaze) பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை தாக்கும் வீடியோ காட்சிகளையும் ஹவுதி அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய எண்ணெய் டேங்கர் கப்பலில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் வான்வழி ஆளில்லா ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய போதிலும் இந்த தாக்குதலை ஹவுதி அமைப்பினர் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
The tanker's armed guards were unable to stop the attack. The Royal Navy was not there to protect the ship. The Red Sea is not the proud navy's moment. #CordeliaMoon #Houthis pic.twitter.com/WqvXn6zYyY
— Dr_Silberschmelzer (@silberschmelzer) October 4, 2024
இந்த தாக்குதலின் முடிவில் பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தி இருப்பதையும் ஹவுதி அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹவுதி அமைப்பினரின் இந்த தாக்குதல் காரணமான செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |