தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி சென்றது எப்படி?
how 17 prisoners escaped from theni jail: தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 3 ஆம் பிளாக்கில் உள்ள கைதி ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறப்பட்ட நிலையில், சிறை காவலர்கள் சிறையின் பிரதான கதவை திறந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த 17 கைதிகள் கும்பலாக சேர்ந்து இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட சிறைக்கு வந்த தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, தப்பியோடியவர்களை கைது செய்ய 25 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போது வரை 4 கைதிகள் பிடிபட்டுள்ளனர். தேனி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கேரளாவிற்கு தப்பி சென்றிருக்கலாம் என அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து தேடப்பட்டு வருகின்றனர்.
தப்பியோடியவர்களில் பெரும்பாலானோர் மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அடிதடி, கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மீது கொலை வழக்கு காரணமாக குண்டர் சட்டம் உள்ளது.
சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வருகை தந்துள்ளார். பணியில் இருந்த 9 சிறை காவலர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
31 ஆண்டுகளுக்கு பின்பு அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தப்பி சென்றுள்ளனர். முன்னதாக, 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுதந்திர தினத்தன்று வேலூர் கோட்டை சிறையில் இருந்து 43 கைதிகள் 153 அடி நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தப்பிச் சென்றனர். அதில் 21 பேர் மட்டுமே பிடிபட்டனர்.
கடந்த வாரம் புழல் மத்திய சிறையில் இருந்து தப்பி சென்ற இரு கைதிகள், இரு நாட்களிலே பிடிபட்டனர்.