1995 வேலூர் கோட்டை சம்பவம்; 158 அடி நீள சுரங்கம் தோண்டி தப்பித்த 43 கைதிகள்

Prison Vellore
By Karthikraja Oct 27, 2026 08:29 AM GMT
Report

how 43 prisoners escaped in 1995 vellore jail break:  1995 வேலூர் கோட்டையிலிருந்து 43 கைதிகள் தப்பி சென்ற சம்பவவே தற்போது வரை தமிழ்நாட்டில் மிகப்பெரிய சிறைக்கைதிகள் தப்பிய சம்பவமாக உள்ளது.

தேனி சிறையில் தப்பிய 17 கைதிகள்

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறையில், உள்ள 17 கைதிகள் நேற்று இரவு வலிப்பு வந்ததாக நடித்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். 

1995 வேலூர் கோட்டை சம்பவம்; 158 அடி நீள சுரங்கம் தோண்டி தப்பித்த 43 கைதிகள் | How 43 Prisoners Escaped 1995 Vellore Jail Break

தப்பியோடியவர்களை கைது செய்ய 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய சிறைக்கைதிகள் தப்பிய சம்பவமாக இது அமைந்துள்ளது.

1995 வேலூர் கோட்டை சம்பவம்

1995 ஆம் ஆண்டில், வேலூர் கோட்டை சிறையிலிருந்த 43 விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள், 10 அடி ஆழத்தில், 158 அடி நீள சுரங்கம் தோண்டி தப்பி சென்றது தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

1995 வேலூர் கோட்டை சம்பவம்; 158 அடி நீள சுரங்கம் தோண்டி தப்பித்த 43 கைதிகள் | How 43 Prisoners Escaped 1995 Vellore Jail Break

1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், இந்திய அரசு விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தது.

அதன் பின்னர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வேலூர் கோட்டையில் திப்பு மகால் என ஒரு பகுதியும், ஹைதர் கோட்டை என மற்றொரு பகுதியும் இருந்தது.

விடுதலைப்புலிகளின் அமைப்பை சேர்ந்த 72 பேர், திப்பு மஹால் சிறைக்கூடத்திலுள்ள அறைகளிலும், அமைப்பை சேராத இலங்கையை சேர்ந்தவர்கள் ஹைதர் கோட்டையிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

விடுதலைப்புலிகள் தங்க வைக்கப்பட்ட தென்மேற்கு மூலையில், 2 சதுர அடி கல்லை பெயர்த்து எடுத்தனர். மண்டபத்தில் இருந்து அந்த இடைவெளி ஊடாக கம்பு ஒன்றை ஏணிபோல் பாலித்து கீழே உள்ள தளத்திற்கு இறங்கியுள்ளனார். 

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி சென்றது எப்படி?

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி சென்றது எப்படி?

பெயர்த்தெடுக்கப்பட்ட கல் மீது மின்சார அடுப்பு ஒன்றை வைத்து பகலில் சமைப்பது போல காவலர்களை ஏமாற்றியுள்ளனர். இரவில் அங்கிருந்து வயர் மூலம் 60 வோல்ட் மின்சார பல்பை எரியச் செய்து வெளிச்சம் ஏற்படுத்தி சுரங்கம் தோண்டியுள்ளனர்.

தென்மேற்கு மூலையில் கீழ்த் தளத்தில் 7 அடி ஆழம் கொண்ட ஒரு குழியைத் தோண்டி பின்னர் அதிலிருந்து 3 அடி விட்டத்தில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

சுரங்கம் தோண்டும்போது மண் இடிந்து விழாமல் இருக்க திப்பு மஹாலின் மற்ற அறைகளில் இருந்து மரக் கட்டைகளை எடுத்து சுரங்கத்தில் முட்டுக் கொடுத்துள்ளனர். ஜன்னல் கம்பிகளும், சாப்பாட்டு கோப்பை, கரண்டிகளை பயன்படுத்தி இந்த சுரங்கத்தை தோண்டியுள்ளனர்.

முதலாவது, இரண்டாவது சுற்று சுவர்களை பெயர்த்தெடுத்து கயிறு மூலம் கட்டி வெளியே எடுத்தனர். சுரங்கத்தின் மறுமுனையான அகழிப்பகுதியின் வாசல் புற்கள் மற்றும் தழைகளால் மறைக்கப்பட்டிருந்தது.

சுரங்கத்தில் தோண்டப்பட்ட மண், மற்றும் கற்கள், சிறை காவலர்களால் மூடப்பட்டிருந்த 2 அறைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த மண், கற்கள் 50 லொறிகளில் அடைக்கும் கொள்ளளவு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குளியலறையில் ஆரம்பமாகும் இந்த சுரங்க பாதையில் இறங்கி நீண்ட தூரம் நடந்து சிறையை சுற்றியுள்ள அகழியை அடைந்தனர். ஒவ்வொருவருக்கும் இந்த சுரங்கத்தை கடக்க 3 நிமிடங்கள் தேவைப்பட்டது.

சுரங்கம் வழியாக அகழிப்பகுதியில் வெளியேறும்போது கண்காணிப்புக் கோபுரத்தில் (Observation Post) இருந்து பார்க்கக் கூடியதாக இருந்திருக்கவும் என்பதால் இரவு நேரங்களில் தப்பினர்.

அவர்கள் தப்பிய போது மின்சாரமும் தடைப்பட்டிருந்ததால் அவர்களுக்கு கூடுதல் வசதியாக இருந்தது. மேலும் மின்சாரம் இல்லாததால் சுழல் தேடுதல் ஒளிபாய்ச்சி (Search light) வேலை செய்யவில்லை. இதனால் கண்காணிப்புக் கோபுரமும், தேடுதல் ஒளிபாய்ச்சியும் பயன்படாமல் போனது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டையில் சிறப்பு பயிற்சி பெற்ற 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலே புலிகளோ அமைப்பினர் தப்பியிருந்தாலும், இந்தியாவின் 48வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதியே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதில் ஒரு குழு சென்னை நோக்கி சென்ற போது, 11 பேர் காவல்துறையிடம் சிக்கினர். அதில் இந்த நடவடிக்கைக்கு திட்டமிட்டு தலைமை தாங்கிய சங்கர் மற்றும் பஞ்சன் என்பவரும் சயனைட் அருந்தி உயிரை மாய்த்தனர்.

மீதமுள்ளவர்கள் காவல்துறையின் தேடுதல் குறைந்த பின்னர், இலங்கைக்கு தப்பி சென்றனர். இதில் சிலர் மதுரையில் பழநெடுமாறனின் பாதுகாப்பிலும், சிலர் சேலத்தில் கொளத்தூர் மணியின் பாதுகாப்பிலும் இருந்ததாக கூறப்பட்டது.

பூந்தமல்லி சிறையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உள்ள கைதிகளை தப்பிக்க வைப்பதற்கான முன்னோட்டமாக இதனை இந்திய அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டினர்.

வேலூர் கோட்டை

1526 ஆம் ஆண்டு சின்ன பொம்மி என்ற மன்னரால் கட்ட தொடங்கப்பட்ட இந்த கோட்டை, 1595 ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்த இந்த கோட்டை நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

2600 மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கோட்டையின் மதில் சுவரை சுற்றி 8 மீட்டர் ஆழமும், 60 மீட்டர் அகலமும் உள்ள மிகப்பெரிய அகழி உள்ளது.

1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு, அவரது தாயார், மனைவி, மகள், மந்திரிகள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இங்கே தான் சிறை வைக்கப்பட்டனர்.

1815 ஆம் ஆண்டில், இலங்கை மன்னர் ஸ்ரீவிக்கிரமராஜாசிங்கனை ஆங்கிலேயர்கள் இந்த சிறையில் தான் அடைத்தனர். அவர் 1832 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையிலே காலமானார்.    

பல மன்னர்கள் கூட தப்பி செல்ல முடியாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த கோட்டையிலிருந்து விடுதலைப்புலிகள் தப்பிய சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.  

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US