நாம் பேசுவது சமூக ஊடகங்களில் தெரியும்! இதன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?
என்றைக்காவது இதைப்பற்றி யோசித்துள்ளீர்களா? நாம் யாரிடமாவது உரையாடியது தொடர்பிலான விளம்பரங்கள், வீடியோக்கள், தகவல்கள் என ஏதேனும் நீங்கள் சமூக வலைதள பக்கங்களை பார்க்கும்போது பாப்-அப் ஆகியிருக்கலாம்.
நாம் ஒரு பதிவுக்கோ, வீடியோவுக்கோ அல்லது கருத்துக்கோ லைக் செய்திருந்தால், அல்லது அதிக நேரம் எடுத்து பார்த்திருந்தால், மீண்டும் அது தொடர்பிலான ஊட்டங்களை அடிக்கடி இணையத்தில் அல்லது சமூக வலைத்தளங்களில் இது எப்படி என்ற கேள்வி எழுந்தது உண்டா?
பெரும்பாலும் நாம் பேசும், விரும்பும் விஷயங்கள் தொடர்பான விளம்பரங்களும் பதிவுகளும் Facebook feed-ல் தோன்றும். ஃபேஸ்புக்கின் அல்காரிதம் செயற்கை நுண்ணறிவையும் கொண்டிருப்பதால் இது நிகழ்கிறது.
Meta
ஒரு வலைதள பதிவில், மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக் (Nick Clegg), பயனர்கள் பார்ப்பதில் AI எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினார்.
ஒரு தகவல் (content) உங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதை எங்கள் AI அமைப்புகள் கணிக்கின்றன. எனவே அவற்றை விரைவாகக் காட்ட முடியும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பதிவைப் பகிர்கிறீர்கள் என்றால் அந்த பதிவை நீங்கள் சுவாரஸ்யமாகக் கண்டீர்கள் என்று அர்த்தம். எனவே எங்கள் அமைப்பு அது தொடர்பான விஷயங்களை பரிசீலித்து அவற்றை சேமித்து வைக்கிறது, என்று கிளெக் விளக்கினார்.
Meta
பயனர்களின் ஊட்டங்களில் AI எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்ட மெட்டா 22 சிஸ்டம் கார்டுகளை வெளியிட்டது. இந்த சிஸ்டம் கார்டுகள், ஊட்டத்தில் உள்ள உள்ளடக்கத்தை AI அமைப்புகள் எவ்வாறு தரவரிசைப்படுத்துகின்றன, எந்தெந்த பதிவுகளை மக்கள் மிகவும் பொருத்தமானதாகக் கருதுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு அமைப்பு செய்யும் கணிப்புகள் மற்றும் உங்களின் சொந்த Facebook ஊட்டத்தைத் தனிப்பயனாக்க நீங்கள் என்ன கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது.
கணக்குகள் அல்லது அவர்கள் பின்தொடரும் நபர்களிடமிருந்து அவர்களின் ஆர்வங்களைக் கண்டறிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ், ரீல்கள் மற்றும் பிற பதிவுகளை எங்கள் AI அமைப்பு சேகரிக்கிறது என்று கிளெக் கூறினார்.
அதேநேரம், ஒரு பயனர் எதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்றும் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முடிந்தவரை நெருங்குவதற்கு நாங்கள் பலவிதமான கணிப்புகளைச் செய்வோம். சில அவர்களின் நடத்தை அடிப்படையிலும், சில கருத்துக்கணிப்புகள் மூலம் பெறப்படும் பயனர் கருத்துகளின் அடிப்படையிலும் இருக்கும் என்று அவர் கூறினார்.
META, Facebook, Instagram, Artificial Intelligence
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |