இயற்கை பேரழிவுகளின் அறிகுறிகளை விலங்குகளும் பறவைகளும் எப்படி முன்கூட்டியே அறிந்து கொள்கின்றது?
பொதுவாக பறவை விலங்குகள் மற்றும் வேறு பல உயிரினங்களும் இயற்கையை சார்ந்து வாழ்கின்றன. இயற்கை கட்டமைத்த பாதையில் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றன. எனவே இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும், மாற்றங்களையும் அவைகளால் உணர முடிகிறது.
நிலநடுக்கம் ஏற்படும் போது மிக மெல்லிய அதிர்வு ஏற்படுகிறது. இதனை உணரும் திறன் சில பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சிறப்பாகவே உண்டு. அவற்றின் மூளையில் உள்ள உணர்திறன் பகுதி அந்த அதிர்வை இவற்றுக்கு வெளிக்காட்டுகிறது.
கடலில் சுனாமி வரப்போகிறது என்பதை கடலில் வாழும் சில திமிங்கலங்களும் பெரிய பாலூட்டிகளும் எளிதில் அறிந்து கொள்ளும். ஏனெனில் அவை ஆழ்கடலில் வாழ்பவை. கடலுக்கு அடியில் ஏற்படும் நில நடுக்கம், நில அதிர்வு போன்ற காரணத்தால் அவை அந்த பகுதியை விட்டு விலகி கரையோரப் பகுதியை அடைகின்றன.
பறவைகளுக்கு மூளையின் உணர்திறன் மிகுந்த திறன் வாய்ந்தது. இயற்கையின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தெளிவாக அறிந்து நடக்கிறது.
விண்ணில் பறக்கும் போதும், வலசை செல்லும் போதும் புவியின் நிலப்பரப்பின் தாக்கத்தையும் அதிர்வுகளையும் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன.
விலங்குகளில் என்று எடுத்துக்கொண்டால் சிறிய விலங்கினங்கள், ஊர்வன மற்றும் பூச்சிகள் போன்றவற்றில் எளிதில் உணர்ந்து கொள்ளும் உணர்திறன் உறுப்புகள் மிகவும் திறன் வாய்ந்தவை.