ஜேர்மனியில் நிலவும் திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாடு
ஜேர்மனியில், திறன்மிகுப் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஜேர்மனியில் நிலவும் திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாடு
2026ஆம் ஆண்டில் துவக்க நிலவரப்படி, ஜேர்மனியில் சுமார் 617,000 திறன்மிகுப் பணியாளர்களுக்கான தேவை உள்ளது.
StartupStockPhotos from Pixabay
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த தலைமுறையினரான பேபி பூமர் தலைமுறையினர் (baby boomer generation) ஏராளமானோர் பணி ஓய்வு பெறுவதாலும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், அந்த இடைவெளியை நிரப்ப போதுமான இளைஞர்கள் இல்லாததாலும், ஜேர்மனியில் இந்த நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், 2029வாக்கில், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் திறன்மிகு வர்த்தகம் ஆகிய துறைகளில் சுமார் 400,000 பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |