மட்டன் சாப்பாட்டில் தூக்க மாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொன்றது எப்படி?
Bengaluru cab driver killed wife, relatives: இந்தியாவின் பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொன்ற நபர் திட்டமிட்டு கொலைகளை செய்தது போலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பெங்களூருவின் ராஜாஜி நகர் பகுதியில் தனது மனைவி சுனிதாவுடன் வசித்து வருகிறார் இந்து சேகர்.
திருமணமாகி 20 ஆண்டுகளாக ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது, சுனிதாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்து சேகர் சுனிதாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மட்டன் உணவில் தூக்க மாத்திரை
இதன்படி வீட்டின் மட்டன் உணவில் தூக்க மாத்திரை கலந்து சுனிதாவுக்கு கொடுத்துள்ளார், அவர் உறங்கியதும் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக சுமார் 10 சுற்றுகள் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றியுள்ளார், ரத்த கரைகள் மற்றும் வாடை இல்லாமல் இருக்க ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தியுள்ளார்.
இருட்டிய நேரம் சடலத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவார், இதற்காக பயன்படுத்திய வாகனத்தில் PRESS என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தியுள்ளார்.
அடுத்தடுத்து அரங்கேறிய கொலை
அடுத்ததாக சுனிதாவின் சகோதரர்கள் சிவகுமார் மற்றும் சங்கர் என்பவரை கொலை செய்த பின்னர், அவர்களது மனைவிமார்கள் நளினி, திவ்யா மற்றும் மாமியார் ரூபாவதி சங்கரின் ஏழு வயது மகன் புனித்தையும் இதே பாணியில் கொன்றுள்ளார்.
ரத்த வாடை வராமல் இருக்க வேதியியல் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். தனது மனைவி சுற்றுலா சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்திடம் கூறியுள்ளார்.
மனஉளைச்சலே காரணம்
விசாரணையில் குடும்ப பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் இதுவே கொலைக்கு காரணம் என இந்துசேகர் கூறியுள்ளார், இதுதொடர்பில் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ள போலிசார் அவரது மகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தொடர்ந்துள்ளனர்.